மலையக பாடசாலை ஒன்றில் கணனியில் மாணவனுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியர்..!

152

கண்டி தெல்தெனிய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தகவல் தொழில்நுட்ப பாடங்களை கற்பிப்பதற்காக பாடசாலையில் இருந்த மடிக்கணினியில் பாலியல் மற்றும் நிர்வாண காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை 12 வயது மாணவனிடம் காட்டிய குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 07ஆம் மற்றும் 09ஆம் திகதிகளில் பாடசாலை நேரத்தின் போது குறித்த ஆசிரியர் தன்னை தகவல் தொழில்நுட்ப அறைக்கு அழைத்துச் சென்று நிர்வாண புகைப்படங்களைக் காண்பித்ததாக மாணவர் தனது பெற்றோருடன் வந்து தெல்தெனிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பின்னர் குறித்த மடிக்கணினியை பொலிஸார் கைப்பற்றி அதனை சோதனையிட்டதன் பின்னர் சந்தேகத்தின் பேரில் ஆசிரியரை கைது செய்து தெல்தெனிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சந்தேகத்திற்குரிய ஆசிரியர் நாளை (19) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பாடசாலையில் கற்பித்துக் கொண்டிருந்த தெல்தெனிய மடபொல பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய ஆசிரியர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த முறைப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபரான ஆசிரியர் 12 வயதுடைய மற்றுமொரு மாணவனை நெல்லிக்காய் பிடுங்குவதற்காக அதிபர் விடுதிக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போது கண்ணாடி துண்டு ஒன்று மாணவனின் கையை அறுத்துள்ளதாக அவரது தாயார் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவன் மருத்துவ பரிசோதனைக்காக தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

 

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.