மலையகத்தில் மூன்று மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற ஆசிரியருக்கு நேர்ந்த கதி..!

169

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட வட்டவளை பகுதியில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் பாடசாலை மாணவிகள் மூவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த அதே பாடசாலையின் விஞ்ஞான ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியராக குறித்த ஆசிரியர் சுமார் 5 வருடங்கள் கடமையாற்றி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த ஆசிரியர் பாடசாலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மூன்று சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாகவும், அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அசௌகரியம் ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்த செய்திகளுக்கு பதில் அளிக்காததால், வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவிகள் மீது தேவையற்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதால் சம்பந்தப்பட்ட மாணவிகள் வட்டவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன்படி, வட்டவளை பொலிஸாரால் 44 வயதுடைய சந்தேகநபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.