மலையகத்தில் மற்றுமொரு சோகம்-இரு குழந்தைகளின் தந்தை சடலமாக மீட்பு..!

179

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஹப்புகஸ்தனை தோட்டத்தைச் சேர்ந்த மூக்கையா கனகேஸ்வரன் இரண்டு குழந்தைகளின் தந்தை கடந்த 15 ம் திகதி தனது வீட்டில் இருந்து கென்யோன் நீர் தேக்கத்தில் மீன் பிடிக்க சென்ற வேளையில் நீரில் மூழ்கிய நிலையில் காணாமல் போய் உள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவரது மனைவி 16 ம் திகதி மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

நீரில் மூழ்கிய நபரை தேடும் பணி விஷேட படையினர் மூலம் தேடிய போதும் அவரது சடலம் கிடைக்காமல் கைவிடப்பட்ட நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு அவரது சடலம் நீர்த் தேக்க பகுதியில் மிதந்த நிலையில் காணப்பட்டதுடன், ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவான் தமயந்தி நேரில் பார்வை இட்ட பின்னர் சடலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் இன்று(17) மதியம் கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் சட்ட வைத்திய அதிகாரி முன் நிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.