மலையகத்தில் தரம் 5 மாணவியை துஸ்பிரயோகம் செய்த தமிழ் ஆசிரியருக்கு நீதிமன்று அதிரடி தீர்ப்பு..!

230

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு 12 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து நுவரெலியா மேல் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (05) மாலை தீர்ப்பளித்துள்ளது.

நோட்டன்பிரிஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளவட்டன் பகுதியைச் சேர்ந்த இராஜரட்ணம் கேதீஸ்வரன் (வயது 37) என்பவருக்கு இந்த கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதவான் விராஜ் வீரசூரிய இத் தண்டனையை வழங்கியுள்ளார்.

கடந்த 2010 ஆண்டு ஜனவரி மாத காலப்பகுதியில் கிளவட்டன் பகுதி பாடசாலை ஒன்றில் பகுதிநேர ஆசிரியராக கடமையாற்றிய இராஜரட்ணம் கேதீஸ்வரன் என்பவர் தரம் ஐந்தில் கல்வி கற்ற சிறுமியான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அவர் மீது வழக்கு நுவரெலியா மேல் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் கடந்த 14 வருடங்களாக விசாரிக்கப்பட்ட நிலையில் வழங்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் இந்த பகுதி நேர ஆசிரியர் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நிலையில் இவருக்கு 12 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டது.

அத்துடன் குற்றவாளியாக இனங்காணப்பட்டவர் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஐந்து இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் இத் தொகை வழங்காவிட்டால் மேலும் 2 வருட சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி அறிவித்தார்.

மேலும், நீதிமன்ற தண்டணை பணமாக ஐந்தாயிரம் செலுத்த உத்தரவிட்ட நீதிபதி இத்தொகையை செலுத்தாவிட்டால் மேலும் இரண்டு மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.