மலையகத்தில் உலக சாதனையை நோக்கி இசைப்பயணம்-அசானியும் பங்கேற்பு..!

ஏஆர்எஸ் இன்டர்நேஷனல் ஆர்கெஸ்ட்ர் (ARS INTERNATIONAL ORCHESTRA) வழங்கும் உலக சாதனையை நோக்கிய 12 மணிநேர தொடர் இசை ஹட்டன் மாநகரில் பெப்ரவரி இன்று நடைபெற்று வருகிறது.

அசானியும் இதில் அழைக்கப்பட்டு கொளரவிக்கப்பட்டார்.

முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கொழும்பில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.

அங்கு கருத்து தெரிவித்த ARS INTERNATIONAL ORCHESTRA வின் தலைவரும் ஸ்தாபகருமான டாக்டர் Rashmi Roomi,

“ஹட்டன் மாநகரில் ‘பாடுவோர் பாடலாம்’ என்ற இசை நிகழ்ச்சி பெப்ரவரி 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதற்கான சகல விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு மாதங்களாக பல கட்ட குரல் தேர்வுகள் இடம்பெற்றதுடன் அதிலிருந்து 50 பாடகர்கள், படகிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் சகலருக்கும் சான்றிதழ்களும் முதல் மூன்று இடங்களை பிடிப்போருக்கு பெறுமதியான பரிசுகளும் வழங்கப்படும்” என்றார்.

இந்நிலையில், நிகழ்ச்சியியை பலர் கண்டு வருகின்றனர்.

Comments are closed.