மற்றுமொரு மர்ம மரணம்..!

96

தம்புள்ளை, வேவலவெவ பிரதேசத்தில் வீடொன்றில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு நேற்று (27) கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் 45 வயதுடைய திருமணமானவர் எனவும் அவர் தனது மனைவியைப் பிரிந்து தாயுடன் வீட்டில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் குறித்த நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.