மர்மமாக உயிரிழந்த மகன்-துயரத்தில் தந்தை எடுத்த முடிவு..?

136

அனுராதபுரத்தில் மகன் திடீரென உயிரிழந்தமையை தாங்க முடியாத தந்தை உயிரை மாய்க்க முயற்சித்த நிலையில் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

எப்பாவல, கட்டியாவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய உடற்கட்டமைப்பாளர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 10 ஆம் திகதி குறித்த இளைஞன் தனது வீட்டின் முன் விழுந்து கிடந்த நிலையில், ​​அவரது இளைய சகோதரர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

எனினும் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர், அந்த வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அவரது மரணத்தால் அவரது தந்தையும் மனம் உடைந்து விஷம் அருந்திய நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த உடற்கட்டமைப்பாளர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் குடித்துவிட்டு வந்து வீட்டின் அருகே கூச்சலிட்டதாக தெரியவந்துள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இந்த உடற்கட்டமைப்பு வீரரின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.