மயிரிழையில் தப்பிய மாணவன்

208

வவுனியாவில் பாதசாரி கடவையூடாக வீதியினை கடக்க முயன்ற மாணவனை மோட்டார் சைக்கிள் மோதியதில் மாணவன் சகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள பாதசாரிகள் கடவையில் இன்று மதியம் இடம்பெற்றது.

துவிச்சக்கரவண்டியில் பாதசாரி கடவையூடாக வீதியினை கடக்க முயன்ற மாணவனின் துவிச்சக்கரவண்டி மீது நகரிலிருந்து ஏ9 வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மாணவன் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளமையுடன் மாணவனின் துவிச்சக்கரவண்டியும் பகுதியளவில் சேதமடைந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துருந்தனர்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.