மன்னார் அடம்பன் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் அருட்தந்தை டிலான் உயிரிழப்பு..!{படங்கள்}

488

மன்னார் – அடம்பன் பொலிஸ் பிரிவில் உள்ள அடம்பன் நாற்சந்தியில் நேற்று (4) திங்கட்கிழமை மாலை 5.45 மணி அளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த சலேசியன் சபையைச் சேர்ந்த அருட்தந்தை மரிசால் டிலான் (வயது-34) உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தானது நேற்று திங்கட்கிழமை (04) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,

வடக்கு கிழக்கு தமிழ் மறைமாவட்ட குருக்களுக்கான தவக்கால தியானம் மன்னார் மடு தேவாலயத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விட்டு நேற்று மாலை திரும்புகையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

மன்னார் – அடம்பன் பகுதியூடாக அருட்தந்தை டிலான் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதுண்டதில் விபத்து சம்பவித்துள்ளது.

இதன் போது படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மேலதிக சிகிசிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் விபத்து தொடர்பான விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
429584257 3637595986464442 43257182169813109 n

429592276 1052530189377513 980195509373968750 n

429820027 1081943159708789 8872544888665734561 n

429919410 379268981550627 1940910679682414677 n

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.