மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் தொடர்பில் மக்களின் கோரிக்கை-அபிப்பிராயங்கள்..!{படங்கள்}

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள 250 மெகா வோல்ட் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் 2ஆம் கட்ட நடவடிக்கைக்கான மக்களின் அபிப்பிராயங்கள் மற்றும் கோரிக்கைகள் மன்னார் பிரதேசச் செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை(6) மதியம் கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் கடந்த மாதம் முன் வைக்கப்பட்ட 250 மெகா வோல்ட் காற்றாலை மின் உற்பத்தி வேலைத்திட்டத்தின் 2 ஆம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் இறுதி சுற்றறிக்கை இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

-மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையிலான குழுவினர் கையளித்துள்ளனர்.

குறித்த காற்றாலை மின் உற்பத்தியினால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான மக்களின் கருத்துக்கள் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.

காற்றாலை மின் உற்பத்தியினால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான மக்களின் கருத்துக்கள் மற்றும் குறித்த திட்டத்திற்கு மக்களின் எதிர்ப்புகள் தொடர்பாகவும்,அவர்களின் கடிதம் மற்றும் கையெழுத்துக்களும் இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இத் திட்டத்தை மக்கள் எதிர்க்க வில்லை எனவும்,இத்திட்டத்தை மக்களை பாதிக்காத வகையில் மன்னார் தீவில் இருந்து பிறிதொரு இடத்தில் முன்னெடுக்குமாறு மக்கள் கோரிக்கை முன் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
WhatsApp Image 2024 03 06 at 4.32.13 PM

WhatsApp Image 2024 03 06 at 4.32.14 PM

WhatsApp Image 2024 03 06 at 4.32.14 PM (1)

Comments are closed.