மட்டக்களப்பின் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளர் விபத்தில் பலி!

226

மட்டக்களப்பின் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளர் சிறிபாலு அவர்கள் இன்று வீதி விபத்தொன்றில் சிக்கி பலியாகியுள்ளார்.

மேற்படி சம்பவம் மட்டக்களப்பு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது.

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுளை வீதியில் புலையவெளி என்ற இடத்தில் இடம்பெற்ற வாகன விபத்திலேயே அவர் பலியாகியுள்ளார் .

செங்கலடி கொம்மாதுறை பகுதியைச் சேர்ந்த சிவில் செயற்பாட்டாளரான தம்பிநாயகம் சிறிபாலு (54) வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சம்பவம் இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்காக நடைபெற்ற போராட்டங்கள் முதல் கொண்டு பல சிவில் சமூக செயற்பாடுகளி ஈடுபட்டவர் என்பதோடு மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களிலும் பணியாற்றி வருகிறார்.

கரடியனாறு பகுதியில் இருந்து செங்கலடி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது வீதி ஓரத்தில் டயர் பஞ்சராகி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனமொன்றின் மீது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோதிய போது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன். திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் சடலத்தை பார்வையிட்டு விசாரணை நடாத்தியதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.