மகளின் இறப்பில் சந்தேகம்-10 மாதத்தின் பின் கணவன் கைது-நடந்தது என்ன..?

229

தனது மனைவியை பலமாக தாக்கி காயப்படுத்தி , விபத்தில் காயமடைந்ததாக கூறி வைத்தியசாலையில் அனுமதித்ததாக கூறப்படும் கணவர் களுத்துறை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பதுரலிய பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவராவார்.

30 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான தனது மனைவி முச்சக்கரவண்டியில் இருந்து வீழ்ந்து காயமடைந்துள்ளதாக கூறி  இவர் கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்  பதுரலிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

காயமடைந்தவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது மரணம் தொடர்பில் சந்தேகிப்பதாக உயிரிழந்தவரது குடும்பத்தினர் அளித்த முறைப்பாடுக்கமைய விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் 10 மாதங்களுக்கு பின்னர் சந்தேக நபரான கணவரை கைது செய்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.