பொதுமக்கள் பகுதியில் ஏன் புத்தர் சிலை-சுழிபுர பிரதேச மக்கள் சொல்வதென்ன..!

யாழ்ப்பாணம் சுழிபுரம் சவுக்கடி கடற்கரையில் கடற்படையினரால் 10 வருடத்தின் முன்பு அமைக்கப்பட்ட புத்தர் சிலையினால் எதிர்காலத்தில் கடற்றொழிலுக்கு பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது யாழ்ப்பாணம் சுழிபுரம் மேற்கு சவுக்கடி கடற்கரையில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்களுக்காக கடற்படையினர் காணி ஒன்றினுள் முகாமிட்டு நீண்டகாலமாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் காணப்படுகின்ற சைவ ஆலயம் ஒன்றின் பின்னே இயற்கையாக வளர்ந்த அரச மரம் ஒன்றின் கீழே இவ்வாறு புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

கடற்படையினர் தமது முகாமினுள் காணியினை வைத்திருக்கின்ற அதேவேளை எதற்காக பொதுமக்கள் பகுதியில் குறித்த விகாரையை அமைக்க வேண்டும் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த புத்தர் சிலை அண்மையில் அமைக்கப்பட்டிருந்தாலும் மாதகல் சம்பில்துறை பகுதியில் காணப்படுகின்ற விகாரையை அண்டிய பகுதிகளில் மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளில் கடற்படையினர் தொடர்ந்து தலையீட்டை மேற்கொண்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையிலும் பிரதேச வாசிகள் அமைக்கப்பட்டுள்ள இவ் சிறு புத்தர் சிலையுடனான வணக்கஸ்தலத்தை அகற்றுமாறு கோரியுள்ளனர்.

இதேவேளை குறித்த சிலை வைக்கபட்ட பொழுது மௌனமாக இருந்த அரசியல்வாதிகள் தமது அரசியலுக்காக கருத்துக்களை போராட்டங்களை மேற்கொண்டு சமநிலையை குழப்பாது இதனை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

Comments are closed.