பெண்கள் பாடசாலையில் பற்றியெரிந்த தீ அலறி ஓடிய மாணவிகள்..!

259

மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் அரபு பெண்கள் பாடசாலை ஒன்றில் தீ பரவியுள்ளது.

 

தீ விபத்தின் போது பாடசாலையில் சுமார் 150 மாணவிகள் இருந்த போதிலும்,  அவர்கள் யாரும் தீயினால் பாதிக்கப்படவில்லை.

 

அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து தீயை விரைவாக அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதிலும், தீயினால் சொத்துக்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

 

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.