புலிகளுக்கு எதிரானவன் நான் இல்லை-மேற்கத்தைய வெள்ளையர்களின் அதிகாரத்துக்கு அடங்க மறுப்பவன் மட்டுமே..!

160

தான் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவன் கிடையாது என்று அதுரலியே ரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்

பொதுநிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர்,

என்னைப் பற்றி பெரும்பாலானவர்கள் நான் சிங்கள இனவாதி, புலிகளுக்கு எதிரானவன் என்று கற்பிதம் செய்து கொண்டிருக்கின்றார்கள்

ஆனால் நான் அப்படியானவன் இல்லை. அந்தந்த சந்தர்ப்பங்களின் அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்பவே எனது கருத்துக்களை வெளியிட்டிருந்தேன்

மற்றபடி நான் மக்களை மையப்படுத்திய பொருளாதாரத் தன்னிறை குறித்த கொள்கையைக் கொண்டவன்.

மேற்கத்தேய நாடுகளுக்கு அடிமைச் சேவகம் புரிவதை எதிர்க்கும் நாட்டுப்பற்றாளன் என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.