பாரத பிரதமருக்கு வடமாகாண மீனவர்கள் கடிதம் அனுப்பி போராட்டம்..!{படங்கள்}

மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்களுக்கு,

திகதி: 05. பங்குனி. 2024 ஆண்டு

இந்திய துணைத்தூதுவர் ஊடாக (ஊடாக), யாழ்ப்பாணம் இலங்கை

தமிழக மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையும் அவர்களின் இழுவைமடி தொழில் முறையினால் எமது மீனர்வர்களின் வாழ்வாதார இழப்பும்.

இலங்கையின் வட மாகாணத்தில்சுமார் இரண்டு இலட்சம் மீனவ குடும்பங்கள் மீன்பிடி தொழிலையே நம்பி வாழுகின்றனர் மேலும் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இம்மீன்பிடி தொழிலை நம்பிய வாழ்வாதார தொழில்களில் தங்கி வாழ்ந்து வருகின்றனர்

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் காரணமாக அனைத்து வாழ்வாதார கட்டமைப்புக்களும் சீர் குலைந்துள்ள நிலையில், மீன்பிடி ஒன்றே தற்போது நம்பிக்கை தரும் தொழிலாக உள்ளது. இந்த தொழிலிற்கும் இந்திய மீனவர்களின் மீன்பிடி முறைகளினால் ஆபத்து ஏற்பட்டுள்ளது

இந்திய மீனவர்கள் எமது நாட்டின் கரையோரம் வரை வந்து எமது கடல் வளங்களையும் கடல் வாழ் உயிரினங்களையும் அழிக்கும் இழுவைமடி தொழிலில் ஈடுபடுகின்றனர் இந்திய மீனவர்களின் இந்த சூழல் விரோத மீன்பிடி முறைமை காரணமாக எமது மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் மீன்பிடி வலைகள் சேதமாக்கப்பட்டு எம் மீனவர்களின் நாளாந்த வருமானத்தினையும் இழந்து வருகின்றனர்.

இரு நாட்டு மீனவர் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பல கட்டங்களில் இதுவரை பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் 05.11.2016 தங்களின் தலைமையில் இல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கௌரவ சுஸ்மா சுபராஜ், இலங்கை வெளிவிவகார அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர, மற்றும் இரு நாட்டின் பாதிக்கப்பட்ட மீனவர்களின் பங்கேற்புடன் எட்டப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த தங்களின் மேலான அதிகாரத்தை பயன்படுத்தி விரைவான நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அதேவேளையில், இலங்கையின் பொருளாதார மற்றும் பல்வேறு நெருக்கடிகளில் இந்திய தேசம்

கரம்கொடுத்து உதவிவரும் சந்தர்ப்பங்களையும் நன்றியுணர்வோடு நினைவு கூறுகின்றோம்.

நன்றி.

மிகவும் பணிவன்புடன்,

வடமாகாண கடற்தொழில் இணையம்.

கிளிநொச்சி மாவட்டம் – பிரான்சிஸ், மன்னார் மாவட்டம் N M ஆலம், முல்லைத்தீவு மாவட்டம் –

தணிகாசலம், யாழ் மாவட்டம் – N V. சுப்ரமணியம்

IMG 20240305 WA0188

IMG 20240305 WA0200

IMG 20240305 WA0198

IMG 20240305 WA0182

Comments are closed.