பாதுகாப்பு அற்ற முறையில் வைக்கப்பட்ட நீர்த்தாங்கி-பெண்ணுக்கு நேர்ந்த துயரம்..!

38

ஹம்பாந்தோட்டை – வலஸ்முல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீர் தாங்கி  12 அடி உயரத்தில் இருந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹம்பாந்தோட்டை – வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயாவார்.

இவர் 14 வருடங்களாக இந்த ஹோட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் கடந்த 15 ஆம் திகதி  இந்த ஹோட்டலின் சமையல் அறையில் இருந்து மதிய உணவுகளை தயாரித்துக் கொண்டிருந்துள்ளார்.

இதன்போது இந்த ஹோட்டலின் மேல்மாடியில் பாதியில் கட்டப்பட்ட நிலையில் உள்ள கொங்கிரீட் தூண் மத்தியில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த நீர் தாங்கி இவரின் தலையில் வீழ்ந்துள்ளது.

காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.