பல்கலைகழக விரிவுரையாளரும் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

40

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் கடைக்குச் சென்று திரும்பும் போது திடீரென ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக வீதியில் விழுந்து மரணமடைந்துள்ளார் என மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.

எதிரிசூரிய ஆராச்சி – பன்னிபிட்டிய ஆரவல பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய டெரன்ஸ் ஆனந்த எரிசூரிய என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞான கற்கைகள் பிரிவின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விரிவுரையாளர் தனிப்பட்ட தேவைக்காக மஹரகம நகருக்கு அருகில் உள்ள சந்தைக்குச் சென்றிருந்த சமயமே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.