பயங்கரவாதிகள் பிடியிலிருந்து சில இலங்கையர்கள் மீட்பு..!

84

மியான்மரில் உள்ள மியாவடி பகுதியில் சைபர் கிரைம் வலயத்தில் பயங்கரவாதிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் குழுவொன்று மீட்கப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 56 இலங்கையர்களில் 08 பேர் இன்று காலை மியன்மார் பாதுகாப்பு படையினரின் தலையீட்டினால் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த குழுவினர் தற்போது மியாவடி பொலிஸாரின் பாதுகாப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏனையவர்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார மேலும் தெரிவித்தார்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.