நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியுடன் பயணித்த முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள் மோதி விபத்து.

154

வள்ளிபுனம் பகுதியிலுள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மீது பயணித்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் தொடராக மோதிய விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (21.03.2024) பிற்பகல் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இருந்து உடையார்கட்டு பகுதி நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி வள்ளிபுனம் பாடசாலைக்கு முன்பாக திரும்ப முற்பட்ட வேளை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் முந்தி செல்ல முற்பட்ட வேளை குறித்த முச்சக்கரவண்டியில் மோதி வள்ளிபுனம் பாடசாலைக்கு முன்பாக முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி வண்டி மீதும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புதுக்குடியிருப்பு பொலிசார் இரண்டு முச்சக்கர வண்டியையும், மோட்டார் சைக்கிளையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியுடன் பயணித்த முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள் மோதி விபத்து. - Veeramurasu Breaking News நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியுடன் பயணித்த முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள் மோதி விபத்து. - Veeramurasu Breaking News நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியுடன் பயணித்த முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள் மோதி விபத்து. - Veeramurasu Breaking News நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியுடன் பயணித்த முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள் மோதி விபத்து. - Veeramurasu Breaking News

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.