நாட்டில் பெரிய வெங்காயத்திற்கு வந்த மௌசு..!

40

பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் தடை விதித்தால் புத்தாண்டு பண்டிகையின் போது ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 700 அல்லது 800 ரூபாவாக உயரக்கூடும் என பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்தின் தலையீடு தேவை எனவும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரிய வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, அடுத்த வாரத்திற்குள் இலங்கையும் அதனை எதிர்கொள்ள நேரிடும்.

வளைகுடா பகுதிக்கான ஏற்றுமதியை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்வது மலிவாக இருப்பதாகவும், தற்போது இராஜதந்திர தலையீடு மூலம் துபாய் மற்றும் வங்கதேசத்துக்கு மட்டும் கோட்டா முறையில் பெரிய வெங்காயத்தை ஏற்றுமதி செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.