நாடக அரங்கியல் உயர் டிப்ளோமா கற்கைநெறியின் 2024/2025 கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..!

138

புத்தசாசனம், சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் டவர் மண்டப அரங்க மன்றத்தின் நாடக பாடசாலையால் முன்னெடுக்கப்படும் நாடக அரங்கியல் உயர் டிப்ளோமா கற்கைநெறியின் 2024/2025 கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் இரண்டு தடவைகளுக்கு மேற்படாதவாறு தமிழ், கணிதம், ஆங்கிலம், அழகியல் ஆகிய பாடங்கள் உள்ளடங்கலாக 06 பாடங்களில் சித்தியடைந்த மற்றும் கா.பொ.த உயர்தரத்தில் இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாதவாறு ஒரே  தடவையில் 03 பாடங்களிலும் சித்தியடைந்த 19-25 வயதுக்குட்பட்ட

இருபாலாரும் இக்கற்கை நெறிக்கு விண்ணப்பிக்க முடியுமெனவும் இக்கற்கைநெறி இரண்டு வருட காலத்தை கொண்ட முழுநேர கற்கை நெறியெனவும் அரங்க மன்ற பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இக்கற்கைநெறி யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.