நண்பர்களுடன் நீராட சென்ற இளம் பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்த துயரம்..!

108

உஸ்வெடகெய்யாவ தல்தியவத்த கடற்கரையில் நீராடச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஏனைய அதிகாரிகள் குழுவுடன் நீராடச் சென்ற கான்ஸ்டபிள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் மீட்கப்பட்டு  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.

ராகம வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் பின்னர் உயிரிழந்த கான்ஸ்டபிளின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.