தேசிய ரீதியில் சாதித்த அல்-அமீன் வித்தியாலய மாணவர்களுக்கு எம். எஸ். தௌபீக் வாழ்த்து..!{படங்கள்}

106

தேசிய ரீதியில் இடம்பெற்ற பாசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட வாழ்த்து அறிக்கையில்,

திங்கட்கிழமை (04) கொழும்பு சுகதாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற அகில இலங்கை ரீதியான (U20) Division II க்கான கால்ப்பத்தாட்ட இறுதிப் போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரியினை 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்டு எமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த தி/கிண்/ அல் – அமீன் வித்தியாலாய மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களை வழிநடாத்திய பாடசாலை சமூகத்தினர் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

மேலும், திருகோணமலை மாவட்ட பாடசாலைகள் தேசிய ரீதியில் பல சாதனைகளை நிகழ்ந்த வேண்டும் எனவும், அதற்கு தன்னால் முடிந்த அனைத்து பக்களிப்புக்களையும் வழங்க தயாராக இருக்கிறேன் என்றும் அவரது அறிக்கையில் தெரிவித்தார்.
IMG 20240305 WA0022

IMG 20240305 WA0021

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.