திருமலையில் மிதந்து வந்த சடலம்-பொலிசார் விடுத்த கோரிக்கை..{படம்}

149

திருகோணமலை டொக்கியாட் கடற்கரையில் நேற்று (01) மாலை அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

திருகோணமலை கடலில் மிதந்துகொண்டிருந்த நிலையில் குறித்த சடலத்தினை அவதானித்த காவல்துறையின் உயிர் காக்கும் படையினர் கடலுக்குச் சென்று குறித்த சடலத்தினை கரைக்கு எடுத்து வந்துள்ளனர்.

 

இடது கால் அங்கவீனமான ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை மரணத்திற்கான காரணம் தெரியவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

 

சடலத்தை இனம் காண்பதற்காக மக்களின் உதவியை நாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை துறைமுக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

IMG 20240302 WA0048

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.