திருமண நாளுக்கு பரிசு தராத கணவனை சம்பவம் செய்த மனைவி..!

32

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திருமண நாளுக்கு பரிசு தராத கணவனை கத்தியால் மனைவி குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது பற்றி மேலும் தெரிய வருகையில்,

பெங்களுருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் கிரண். இவரது மனைவி சந்தியா (வயது35).

சமீபத்தில் இவர்களுக்கு திருமண நாள் வந்துள்ளது. அந்நாளில், மனைவிக்கு கிரண் பரிசு வாங்கித் தரவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்தியா, கணவன் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

மேலும் இதுதொடர்பாக இருவருக்கும் இடையே சண்டையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கணவன் கிரண் தூங்க சென்றார். அதிகாலை 1.30 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த கணவன் கிரணை, கத்தியால் ஆத்திரத்தில் குத்தியுள்ளார் மனைவி சந்தியா.

இதனால் ரத்த வெள்ளத்தில் அலறிய கணவன் கிரணை அக்கம் பக்கத்தினர் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொலிஸாருக்கு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் விரைந்து சென்று விசாரணை செய்து வருகின்றனர். கிரணின் தாத்தா சம்பவ தினத்துக்கு முந்தைய நாள்தான் இறந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இதனால், மனைவிக்கு மணநாள் பரிசு வாங்கித் தரவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கணவனை கத்தியால் குத்திய மனைவியை பொலிஸார் கைது செய்தனர் .மேலும் அவருக்கு மனநல சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.