தித்திக்கும் திங்களில் உங்கள் ராசிபலன் எப்படி..{4.4.2024}

 

மேஷம்

aries-mesham

எதிலும் நியாயமாக நடக்க முயலுங்கள். வாழ்க்கையில் உயர்வு வரும்போது பணிவும் வரவேண்டும். அதிகாரிகளை அனுசரித்து நடந்தால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.

 

ரிஷபம்

taurus-rishibum

செல்வநிலை உயர்ந்து புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். புதிதாக காதல் மலர்ந்து களிப்புத் தரும். எல்லா வளமும் பெருகி பெரிய மனிதர் எனப் பெயர் எடுப்பீர்கள்.

 

மிதுனம்

gemini-mithunum

செயல்பாடுகளின் தீவிரத்தால், செல்வ வளம் பெருகும். தொழிலில் புதிய திட்டங்களை அமல் செய்தால் இலாபம் ஏற்படும். அழகுப் பெண்களின் சிநேகமும், அழகான தனி வீடு அமையும்.

 

கன்னி

virgo-kanni

அன்பு எனும் பாதையில் நடந்தால் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமையும். மனைவியின் ஒத்துழைப்பு மட்டிலாத மகிழ்ச்சி அளிக்கும். எந்த ஒரு காரியம் செய்தாலும் வெற்றி பெற்றுப் பல வழிகளிலும் வருமானம் பெருகும்.

 

மகரம்

capricorn-magaram

எதிர்பாராத வரவு வரும் அளவுக்கு இன்று ஓர் அதிக சக்தி கொண்ட அருமையான நாள். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். பெண்கள் மூலம் உதவி கிடைக்கும். பிரிந்திருந்தவர் கூடி மகிழ்வர்.

 

கடகம்

cancer-kadagam

மதிப்பு, மரியாதை குறையும் படியான காரியங்களில் ஈடுபடுவதை தவிருங்கள். விபத்து ஏற்படாதிருக்க பயணத்தின் போது எச்சரிக்கை தேவை. மனஅமைதி பெற தியானம் செய்க.

 

சிம்மம்

leo-simmam

தொழிலில் ஏற்படும் சறுக்கல்களை தவிர்க்கப் பணியாளர்கள் ஒத்துழைப்புத் தேவை. தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தன்னம்பிக்கையே வெற்றிக்கு மருந்தாகும்.

 

துலாம்

libra-thulam

நல்ல வருமானம் வருவது போல் தோற்றமளிக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்கவும். பதவி அல்லது இட மாற்றங்கள் ஏற்படலாம்.

 

மீனம்

pisces-meenam

தெய்வீக காரிய ஈடுபட்டால். எல்லாவற்றிலும் எளிதில் வெற்றி கிடைக்கும். காரியம் யாவினும் கை கொடுக்கும், மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். புகழ் ஓங்கும். புத்திர பாக்கியம் ஏற்படும்.

 

தனுசு

sagittarius-thanusu

வீட்டில் பெண்கள் மூலம் தேவையற்ற செலவுகள் ஏற்படும். வாழ்க்கையில் புதிய எதிர்மறையான திருப்பங்கள் ஏற்படும். குறிக்கோளின்றி மனம் போன போக்கில் அலைய நேரும்.

 

விருச்சிகம்

scorpio-viruchagam

பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கடின உழைப்பால் உற்பத்தி பெருகி தொழில் அபிவிருத்தியாகி, பணவரவு அதிகரிக்கும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள்.

 

கும்பம்

aquarius-kumbam

எண்ணிய காரியங்கள் எண்ணியபடி நடக்கும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். பிறருக்குக் கட்டளை இடும்படியான அதிகாரமுள்ள அரசு உயர் பதவிகள் கிடைக்கும்.

 

Comments are closed.