திகட்டாத திங்களில் உங்கள் ராசிபலன் எப்படி..!{19.2.2024}

21
மேஷம்
aries-mesham
நல்ஆரோக்கியம், சந்ததி விருத்தி, மந்திர சித்தி, பதவி உயர்வு என இராஜயோகம் தரும் நாள். வாக்கு வன்மையால் வருமானம் பெருகும். பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரிஷபம்
taurus-rishibum
மனக் கசப்புக்களைத் தவிர்க்க, மனைவியை அனுசரித்துச் செல்வது நல்லது. அரசு ஊழியர்கள் பணியை அக்கறை எடுத்துச் செய்யாவிடில் மெமோ வாங்க நேரிடலாம்.
மிதுனம்
gemini-mithunum
பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் மேலோங்கும். காரிய வெற்றியால் களிப்பு உண்டாகும். அரசு ஆதரவும், கல்வியில் தேர்ச்சியும் ஏற்படும். தன்னம்பிக்கை, மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
கன்னி
virgo-kanni
புதிய கலைப் பயிற்சிகளில் மற்றும் கல்வியில் தேர்ச்சி ஏற்படும். சாதுர்யமான வாக்கு வன்மையால் சம்பாத்தியம் உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் திருப்திகரமான வரவால் சந்தோஷம் நிலவும்.
மகரம்
capricorn-magaram
காரிய வெற்றி தரும் களிப்பான நாள். அரசு ஆதரவு இருக்கும் அனுகூலமான நாள். கல்வியில் தேர்ச்சி உண்டு. தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் தேகதிடம் அதிகரிக்கும். அதிகாரம் மிக்க பதவி உயர்வு ஏற்படும்.
கடகம்
cancer-kadagam
இன்று, சோகமான நாளாக இல்லையெனினும், சுகமான நாளாக இருக்காது. பெண்களின் பிடிவாதத்தால் வீண்விரயங்கள் ஏற்படும். குடும்பத்தாருடன் அனுசரித்துச் செல்வது குழப்பங்களைத் தவிர்க்கும்.
சிம்மம்
leo-simmam
பல வழிகளிலும் பணவரவு ஏற்படப்போகும் இனிய நாள். எல்லா வகையிலும் ஏற்றந்தரும் நாள். நல்ஆரோக்கியம், நண்பர்கள் சந்திப்பு, திருமணம் மற்றும் நல்முன்னேற்றம் ஆகியவை ஏற்படும்.
துலாம்
libra-thulam
இன்று, தெய்வ சிந்தனை அதிகரிக்கும் நாள். சிலருக்கு குழந்தைப் பிறப்புக்கான வாய்ப்பு உருவாகும். கோவில், குளம் போன்ற திருப்பணிகளில் ஈடுபடுவதால், புகழ் ஓங்கும். உல்லாசப் பயணங்களால் சந்தோஷம் நிலவும்.
மீனம்
pisces-meenam
சிலருக்கு மனைவியால் மன நிம்மதி குறையலாம். எடுத்த காரியங்கள் ஏற்றம் தராது என்பதால், ஒத்திப் போடுவது நல்லது. கடின உழைப்பே கல்வியில் தேர்ச்சி அளிக்கும்.
தனுசு
sagittarius-thanusu
தொழிலில் புதிய முயற்சிகள் பலன் அளிக்கும். விரிவாக்க நடவடிக்கைகள் வெற்றிகரமாக முடிந்து, உற்பத்திப் பெருக்கத்தால் இலாபம் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு பேன்மை அளிக்கும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
மாற்றம் ஒன்றே மாறாதது. எனவே, இன்று மாற்றங்களை எதிர்பார்க்கலாம். முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும்.
கும்பம்
aquarius-kumbam
இன்று, சுமாரான நாள். மனைவி, மக்களின் உடல் நிலையைப் பொருத்தவரை அக்கறைப் படவேண்டிய நாள். மேலதிகாரிகள் மற்றும் பெரியவர்களிடம் வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.