தாயின் 2 வது கணவரால் 12வயது மாணவி துஸ்பிரயோகம்..!

48

மஹியங்கனை , கெசல்பொத்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 12 வயதுடைய மாணவி ஒருவரை காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத அவரது தாயின் இரண்டாவது கணவர் , துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் செவ்வாய்க்கிழமை (05) பதிவாகியுள்ளது .

குறித்த மாணவி பாடசாலை முடிந்து வீட்டுக்குச் செல்ல முடியாது என அதிபரிடம் தெரிவித்ததையடுத்து இது தொடர்பில் பாடசாலையின் அதிபரால் மஹியங்கனை சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார் .

இதற்கமைய பாடசாலைக்கு சென்ற அதிகாரிகளால் , குறித்த சிறுமி மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , வைத்தியர்களால் பரிசோதனை செய்த போது, மாணவி பல தடவைகளை குறித்த நபரால் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியமை தெரியவந்துள்ளது .

இதனையடுத்து கெசல்பொத்த, மாபாக்கடையில் வசிக்கும் 48 வயதுடைய சந்தேக நபரை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார்
தெரிவித்துள்ளனர் .

மேலும் , குறித்த சிறுமியின் தாயும் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத பெண் என்பது குறிப்பிடத்தக்கது .

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.