தலைமன்னார் கடற்பரப்பினுள் கைது செய்யப்பட்ட 7 இந்திய மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.

118

தலைமன்னார் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் நேற்று புதன்கிழமை (20) கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 07 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று வியாழக்கிழமை (21) மாலை உத்தரவிட்டார்.

நேற்று புதன்கிழமை (20) இரவு இலங்கை கடற்பரப்பினுல் அத்துமீறி நுழைந்து 2 படகுகளில் மீன் பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமில் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் குறித்த மீனவர்களை இன்று வியாழக்கிழமை(21) மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இதன் போது விசாரணைகளை முன்னெடுத்த மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

தலைமன்னார் கடற்பரப்பினுள் கைது செய்யப்பட்ட 7 இந்திய மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு. - Veeramurasu Breaking News தலைமன்னார் கடற்பரப்பினுள் கைது செய்யப்பட்ட 7 இந்திய மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு. - Veeramurasu Breaking News தலைமன்னார் கடற்பரப்பினுள் கைது செய்யப்பட்ட 7 இந்திய மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு. - Veeramurasu Breaking News தலைமன்னார் கடற்பரப்பினுள் கைது செய்யப்பட்ட 7 இந்திய மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு. - Veeramurasu Breaking News

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.