தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து! – மாணவர்கள் உட்பட 15 பேர் வைத்தியசாலையில்

201

வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியின் வெல்லவாய குமாரதாச சந்தியில் சற்று முன்னர் தனியார் பஸ் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

விபத்து காரணமாக 7 பாடசாலை மாணவர்கள் மற்றும் பஸ் சாரதி உட்பட 15 பேர் வெல்லவாய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பஸ் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் நோய் நிலைமை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.