செம்பவள செவ்வாயில் உங்கள் ராசிபலன் எப்படி..! {13.2.2024}[

மேஷம்
aries-mesham
தனலாபத்துடன் எல்லா வளமும் பெறும் இனிய நாள். உல்லாசப் பயணங்களால் உள்ளம் மகிழும். பிரிந்தவர்கள் ஒன்றுகூடி மகிழ்வர். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும்.
ரிஷபம்
taurus-rishibum
எல்லோருக்கும் நல்லதே நினையுங்கள். வழக்குகளில் வாய்தா வாங்கிக் கொள்வது நல்லது. மனைவியின் மனம் அறிந்து செயல்பட்டால் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கலாம்.
மிதுனம்
gemini-mithunum
மனதிற்கினிய நல்ல மனைவி அமைவாள். பேச்சு வன்மையால் பெரும் சாதனைகள் புரிவீர்கள். அரசு மற்றும் அரசியல் வாதிகள் மூலமாக ஆதாயம் பெறுவீர்கள். தெய்வ பக்தியால் மனநிம்மதி கூடும்.
கன்னி
virgo-kanni
சிரத்தையற்ற செயலால் திறமை இருந்தும் நல்ல பெயர் கிடைக்காது. தொழில் ஆர்வம் கூடுவதால், ஆதாயம் பெருகும். வியாபாரிகளுக்கு ஓரளவு இலாபம் கிடைக்கும்.
மகரம்
capricorn-magaram
குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். தொழிலில் இழப்பு ஏற்படும் என்று தெரிந்தும் அதிக முதலீடுகள் செய்யாதிருப்பது நல்லது. தீயவழிகளில் தேவையற்ற செலவுகளைச் செய்ய வேண்டியது வரும்.
கடகம்
cancer-kadagam
ஒதுக்கிவைத்த உறவுகள், தங்கள் வளர்ச்சி கண்டு பொறாமை கொள்வர். முகஸ்துதிக்காகப் பாராட்டவும் செய்வர். . மனைவி தங்கள் மனம் அறிந்து செயல்படுவதால் மகிழ்ச்சி நிலவும்.
சிம்மம்
leo-simmam
வீட்டில் உள்ள பொருள்கள் களவு போகாமல் இருக்க மிகுந்த பாதுகாப்புடன் இருப்பது நல்லது. விபத்தைத் தடுக்க வாகனங்களில் செல்லுமுன் அதன் பாகங்களை பரிசோதித்து எடுத்துச்செல்வது நல்லது.
துலாம்
libra-thulam
சொல்பேச்சு கேட்காத பிள்ளைகளால் நிம்மதி குறையும். வியாபாரப் போட்டி காரணமாக போராடி வெற்றி பெறும் நிலை ஏற்படும். சிலருக்கு தேவையற்ற அவமானங்கள் நேரலாம்.
மீனம்
pisces-meenam
கோபம் தவிர்த்து சிந்தித்து செயல்பட்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் காணலாம். மிகுந்த புத்திசாலிகளும், புத்தி மழுங்கியவர் போல் செயல்படுவர். பெண்களால் பணவிரயம் ஏற்படும்.
தனுசு
sagittarius-thanusu
வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் குவிப்பீர்கள். புதிய தொழில்கள் தொடங்கச் சாதகமான சூழ்நிலை அமையும். நேரத்தை வீணாக்காமல் தன்னம்பிக்கையுடன் படித்தால் தேரலாம்.
விருச்சிகம்
scorpio-viruchagam
தொழில் முதலீடுகளைக் கூடியமட்டும் குறைப்பது நல்லது. வீட்டிலிருந்து வாகனத்தை நகர்த்துவதற்கு முன் அனைத்து பாகங்களையும் பரிசோதித்து எடுக்கவும். மனநிம்மதிக்குக் கடவுளை வேண்டவும்.
கும்பம்
aquarius-kumbam
பெரிய மனிதர்களின் நட்பால் பெருமையடைவீர்கள். பணவரவு எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருக்கும். சாத்திரங்களில் ஆராய்ச்சியும், தேர்ச்சியும் ஏற்படும். தொழில் வளம் பெருகும்.

Comments are closed.