சாந்தன் மரணம் இயற்கையானது அல்ல-திட்டமிட்ட படுகொலை-வெளியான அதிர்ச்சி தகவல்..!

198

சாந்தன் உயிரிழந்த விவகாரமானது இயற்கை மரணமல்ல எனவும் அது இந்திய அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை எனவும் சட்டத்தரணி புகழேந்தி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பின், சிறையிலிருந்து விடுதலையான சாந்தன் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நேற்றையதினம் உயிரிழந்தார்.

இந்நிலையில் சாந்தனின் மரணம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள  சட்டத்தரணி புகழேந்தி ”ஈழத்தமிழருக்கு எதிராக இந்தியாவில் காணப்படும் திருச்சி சிறப்பு முகாம் என்பது இழுத்து மூடப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அண்ணன் சாந்தன் விட்டுச் சென்றுள்ள இந்த செய்தியானது உலகத்தில் கொடுமைகளை அனுபவிக்கும் ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் ஒரு பாடமாக மாறியுள்ளது.

இந்நிலையில், இலங்கை அரசு அனுமதி வழங்கியும் கூட இந்திய அரசினால் சாந்தன் தனது தாய்நாட்டுக்கு அனுப்பப்படாமல் மரணித்த சம்பவம் மிகவும் வேதனைக்குரியது.” என குறிப்பிட்டுள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.