சாந்தன் எந்த நிலையிலும் இலங்கை வந்திறங்கலாம்..!

சாந்தன் எந்த நிலையிலும் இலங்கையில் வந்து இறங்கலாம் என்ற கட்டத்தில்தான் இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் வினவிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சாந்தன் எந்த நிலையிலும் இலங்கையில் வந்து இறங்கலாம் என்ற கட்டத்தில்தான் நிலைமை உள்ளது.

அமைச்சரவையில் இது தொடர்பில் பேசியிருந்தேன்.அதற்கு ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் உள்ளிட்டோர் அவர் இங்கு வருவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என தெரிவித்தனர்.

இது தொடர்பில் சம்மந்தப்பட்டவர்களிற்கு அறிவித்துள்ளோம். அங்கு அதற்கான நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கிறது என தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகார மாற்றம் உள்ளிட்ட பல்வேடு விடயங்கள் தொடர்பில் தேர்தல் காலகட்டத்தில் இவ்வாறான கருத்துக்கள் வந்து போவதுண்டு. வரலாற்றை நாங்கள் திருப்பி பார்க்கின்ற பொழுது, 78 ம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இந்த நாட்டுக்கு அறிமுகம் செய்த பொழுது, தமிழ்கள் தரப்பிலும் அதனை வரவேற்றனர்.

காலப்போக்கில் அதனால் எழுந்த பிரச்சினைகளால் கருத்துக்கள் மாறி மாறி வந்ததுண்டு. எங்களை பொறுத்த வரைவில் இன்றைய பிரச்சினைகளிற்கு நிறைவேற்று அதிகாரம் ஊடாகத்தான் தீர்வுகாணக்கூடிய சூழ்நிலை இலங்கையில் இருக்கின்றது எனவும் தெரிவித்தார்

Comments are closed.