சாந்தனின் உடலுக்கு சீமான் மற்றும் பேரறிவாளன் இறுதி அஞ்சலி..!{படங்கள்}

141

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 33 வருடங்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஈழத்தமிழர் சாந்தன், பல போராட்டங்களின் பின்னர் தாயகம் திரும்ப இருந்த நிலையில் உடல் நலக்குறைவால் இன்று(28)  காலை உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையின் தலைமை வைத்திய அதிகாரி தேரணிராஜன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சாந்தனின் மறைவுச் செய்தியை அறிந்து நாம் தமிழர் கட்சியின்  ஒருங்கிணைப்பாளர் சீமான், திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் மற்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான நளினி மற்றும் பேரறிவாளன் ஆகியோர் சென்னை ராஜீவ் காந்தி அரச பொது மருத்துவமனைக்கு சென்று சாந்தனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Polish 20240228 144612189 17091107182~2 17091107180~2

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.