சமுர்த்தி திட்டம் தொடர்பில் சற்று முன் வெளியான மகிழ்ச்சி தகவல்..!

சமுர்த்தி திட்டத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரத்து செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும், சமுர்த்தி திட்டத்தை மேம்படுத்துவதற்கு விசேட பொறுப்பை எதிர்காலத்திலும் முன்னெடுப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், தற்போதுள்ள முறையில் நலன்புரி நன்மைகள் சபைக்கு இந்த கட்டாயப் பங்களிப்பை வழங்க வேண்டிய பணத்தின் வகையை குறைத்து, மீதமுள்ள பணத்தை பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்க இயலாது என ஜனாதிபதி மற்றும் பிரதமரும் ஆலோசனை வழங்கினர்.

எனவே, சமூக வலுவூட்டல் அமைச்சகம் மற்றும் சமுர்த்தி திணைக்களத்திற்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம்.

2024 ஜூலை முதல் 20 லட்சம் பயனாளிகளின் எண்ணிக்கையை 24 லட்சமாக உயர்த்தும் நேரத்தில், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் இந்தப் பயனாளிகள் அனைவரும் பங்களிக்கும் முறையைத் தயாரிக்குமாறு கோரியுள்ளோம்.

சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளால் இந்த பங்களிப்பு தொகையை தற்போது பயன்பெறும் வங்கி கணக்கிலிருந்து சமுர்த்தி திட்டத்தில் வரவு வைப்பதற்கு அவர்களின் சம்மதம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Comments are closed.