குளவி தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தர்!

34

புதுக்குடியிருப்பில் நேற்று குடும்பஸ்தர் ஒருவர் குளவித் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியிலுள்ள துடும்பஸ்தர் ஒருவருக்கு நேற்று (13.03.2024) மாலை 30 ற்கும் மேற்பட்ட குளவிகள் தாக்கிய நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியிலிருந்து காற்றில் கலைந்த குளவி வீட்டிலிருந்த செல்லையா பரமலிங்கம் 62 வயதுடைய குடும்பஸ்தர் மீது கொட்டியுள்ளது.

இதையடுத்து அவரை உடனடியாக புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

All About Wasp Stings

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.