கல்வி அமைச்சரின் கலாநிதியை தூக்கிய மாகாண கல்விப் பணிப்பாளர் குயின்ரஸ்..!

45

இலங்கை கல்வி அமைச்சரின் கலாநிதிப் பட்டத்தை நீக்கி வடமாகாண கல்விப் பணிப்பாளர் யோன் குயின்ரேஸ் கடிதம் ஒன்றை எழுதிய சம்பவம் கல்வித் திணைக்களத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

இலங்கை கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிறேமஜயந்தவின் கலாநிதி பட்டத்தை நீக்கி திரு சுசில் பிறேமஜயந்த என வட மாகாண கல்வி பணிப்பாளர் குயின்ரேஸ் அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் காணப்படுகிறது .

இலங்கை கல்வி அமைச்சரின் சுசில் பிறேமஜயந்த ஒரு சிரேஷ்ட சட்டத்தரணி மட்டுமல்லாது கலாநிதிப் பட்டத்தையும் பெற்றவர்.

இவ்வாறான நிலையில் ஒரு அமைச்சரை திரு என எழுதியது மட்டுமல்லாது குறித்த கடிதத்தில் வழுக்கள் காணப்படுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே யாழ்ப்பாணம் வந்த கல்வி அமைச்சர் ஏற்றிய தேசியக் கொடியும் தலைகீழாக ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
IMG 20240305 WA0376

IMG 20240305 WA0382

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.