கனடா துப்பாக்கி சூடு-ஆறு இலங்கையர்கள் பலி-நடந்தது என்ன..?

233

கனடாவின் ஒட்டாவாவில் உள்ள வீடொன்றில் வைத்து இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வௌியாகியுள்ளன.

சம்பவத்தில் தாய் மற்றும் அவரது நான்கு பிள்ளைகள் மற்றும் வீட்டில் வசித்து வந்த 40 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குழந்தைகளின் தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நான்கு குழந்தைகளும் ஏழு வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கனடாவில் கல்வி கற்கும் 19 வயதுடைய ஃபேப்ரியோ டி சொய்சா என்ற இலங்கையர் என ஒட்டாவா பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

இந்தச் சம்பவம் முதலில் துப்பாக்கிச் சூடு என அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் ஆயுதமொன்றால் கொலைகள் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

சுமார் மூன்று தசாப்தங்களில் ஒட்டாவாவில் இவ்வாறான ஒரு கொலை இடம்பெற்றது இதுவே முதல் தடவை என மேயர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் வருமாறு:

தாய் – தர்ஷனி பண்டாரநாயக்க – 35 வயது
இனுக விக்கிரமசிங்க – 07 வயது
அஸ்வினி விக்கிரமசிங்க – 04 வயது
றின்யானா விக்கிரமசிங்க – 02 வயது
கெலீ விக்கிரமசிங்க – 02 மாதங்கள்

காமினி அமரகோன் என்ற 40 வயதுடைய நபரே கொல்லப்பட்ட மற்றைய நபராவார்.

இந்த சம்பவத்தில் பிள்ளைகளின் தந்தை படுகாயமடைந்துள்ளதுடன் அவரது பெயர் தனுஷ்க விக்ரமசிங்க எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.