கடும் வறட்ச்சியால் நீர் தேக்க பகுதிகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது..!

கடும் வறட்ச்சியால் நீர் தேக்க பகுதிகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் தொடர்ந்து வெப்பமான காலநிலை தோன்றுவதால் நீர் ஏந்து பகுதியில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 14 அடி குறைந்து 106 நீர் சேமிப்பில் உள்ளது என கென்யோன் நீர் மின் நிலைய அதிகாரி தெரிவித்தார்.

காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட சுமார் எட்டு அடி குறைந்து உள்ளது.
கென்யோன், லக்சபான, பொல்பிட்டிய, கலுகல, விமலசுரேந்திர, நவலக்சபான, மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட வெகுவாக குறைந்து வருகிறது.

இவ்வாறு வெப்பமான காலநிலை தோன்றுவதால் மேலும் நீர் மட்டம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

Comments are closed.