கடலில் மாயமான கல்லூரி மாணவர்கள் நால்வரின் உடலங்கள் மீட்பு..!

ஆந்திர மாநிலம், அனந்தபூர் பகுதியைச் சேர்ந்த கலைக்கல்லூரி மாணவர்கள் 18 பேர் மற்றும் சித்தூர்மாவட்டம், நலகாம்பள்ளியை சேர்ந்தகலைக்கல்லூரி மாணவர்கள் 22 பேர்இரு குழுக்களாக நேற்று மாமல்லபுரம் சுற்றுலா வந்தனர்.

புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்த கல்லூரி மாணவர்கள் 40 பேரும் கடற்கரைக்குச் சென்றனர். அங்கு 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடலில் குளித்தனர். அப்போதுகடல் சீற்றம் அதிகமாக இருந்ததால்10 மாணவர்களை ராட்சத அலை கடலுக்கு இழுத்துச் சென்றது.

இதைக் கண்ட கரையிலிருந்த சகமாணவர்கள் தங்கள் நண்பர்களைக் காப்பாற்றக் கோரி கூச்சல் போடவேகடற்கரையில் புகைப்படம் எடுக்கும்பணியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள்மணிமாறன், ராஜி, விஜி, சதீஷ் ஆகியோர் கடலில் சர்பிங் பலகையின் உதவியுடன் நீந்திச் சென்று கடல் அலையில் சிக்கி உயிருக்குப் போராடிய 5 மாணவர்களைக் காப்பாற்றி கரைக்குக் கொண்டு வந்தனர்.

அலையில் சிக்கிய மாணவர்களில் நலகாம்பள்ளியை சேர்ந்த விஜய்(24)என்ற மாணவரின் உடல் மட்டும் சிறிதுநேரத்தில் கரை ஒதுங்கியது. ஆனால்,மாயமான அனந்தபூர் பகுதியைச்சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பெத்துராஜ்(26), ஷேசாரெட்டி(25), நலகாம்பள்ளியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மவுனீஷ்(18), பார்த்துஷா(19) ஆகிய 4 மாணவர்களின் உடல்கள் கரை ஒதுங்காததால் போலீஸார், செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்புத் துறையினர், சென்னை மெரினா மீட்புக் குழுவினர் ஆகியோர் 2 நாட்களாகத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

Comments are closed.