கசினோவில் தோற்றதால்-போதைப்பொருள் கடத்திய பணக்கார அழகிக்கு நேர்ந்த கதி..!

70

கசினோ சூதாட்டத்தினால் வங்குரோத்து நிலைக்குச் சென்று, பாதாள உலகத்துடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகர்கள் இருவர்  ஞாயிற்றுக்கிழமை (03) வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

போதைப்பொருள் கடத்தல்காரரான தற்போது துபாய்க்கு தப்பிச் சென்றுள்ள  படோவிற்ற அசங்க என்பவரின் போதைப்பொருள் கடத்தல் வர்த்தகத்தில் இவர்கள் இணைந்துள்ளமையும் தெரிய வந்துள்ளது.

 

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் முன்னாள் கோடீஸ்வர கொங்கிரீட் வர்த்தகர் ஒருவரும் ஜப்பானிலிருந்து வந்து பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த கோடீஸ்வர வர்த்தக பெண் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.