ஐஸ்கிறீம் வியாபாரியை கலைத்த பொலிசாரால் வெடுக்கு நாறி ஆதிசிவன் கோவிலில் பரபரப்பு..?{படங்கள்}

232

வெடுக்குநாறிமலையில் ஐஸ்கிறீம் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரியினை பொலிசார் கலைத்தமையால் ஆலய வளாகத்தில் குழப்பநிலை ஏற்பட்டது.

வெடுக்குநாறிமலையில் இன்றையதினம் சிவராத்திரி வழிபாடுகளை மேற்கொள்ளச்சென்ற பொதுமக்களுக்கு பொலிசாரால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில் பொதுமக்களுக்கு குடிதண்ணீரை கொண்டு சென்ற நீர்தாங்கி பொலிசாரால் இடைவழியில் நிறுத்தப்பட்டது.

இதனால் 5கிலோமீற்றர்கள் நடந்துசென்ற பொதுமக்கள் நீர் இன்றி அசௌகரியத்தை எதிர்கொண்டனர்.

இதேவேளை ஆலய வளாகத்தில் ஐஸ் கிறீம் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவரை பொலிசார் விற்பனையில் ஈடுபட வேண்டாம் என தெரிவித்து ஆலயவளாகத்தை விட்டு அகற்றினர். இதனால் பொதுமக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் குழப்பநிலை ஏற்ப்பட்டது.

IMG 20240308 14190261

IMG 20240308 14202535

IMG 20240308 14203695

IMG 20240308 14194900

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.