எஜமானை மீட்க உதவிய வளர்ப்பு நாய்

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் மணவாளன் பட்டமுறிப்ப பகுதியில் நாயுடன் காட்டிற்குள் சென்ற குடும்பஸ்தர் வெடியில் சிக்கி கிடந்த போது அவரது டைகர் எனப்படும் வளர்ப்பு நாய் உறவினர்களிடம் வந்து தனது எஜமானின் ஆபத்து தொடர்பில் அசைவுகளை வெளிப்படுத்தியதை தொடர்ந்து உறவினர்களால் அவர் மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு மீட்கப்பட்டவர் மணவாளன் பட்ட முறிப்பினை சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தந்தையான 66 அகவையுடை பழனி வடிவேல் ஆவர்.

இவர் தேன் எடுப்பதற்காக நேற்று காட்டிற்கு தனது வளர்ப்பு நாயுடன் சென்றுள்ளார். இதன்போது காட்டிற்குள் இருந்த சட்டவிரோத வெடிபொருள் வெடித்ததில் குறித்த குடும்பஸ்தர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வளர்ப்பு நாய் தனியாக வீடு திரும்பி தனது சோகத்தினை வெளிப்படுத்தியுள்ளது.

இதனை அவதானித்த உறவினர்கள் காட்டிற்கு சென்றவரை காணவில்லை என உறவினர்கள் தேடி சென்றுள்ளார்கள். இதன்போது அவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மாங்குளம் ஆதார மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிசிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்போது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Comments are closed.