உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு..!

இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான தொழிற்பயிற்சித் திட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 300 நிலையங்களைப் பயன்படுத்தி இந்தப் பயிற்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் பிற்பகல் 02:00 மணிக்கு அந்தந்த மையங்களுக்குச் சமூகமளிக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொள்கிறது.

இத்திட்டத்தின் மூலம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் ஆங்கில மொழி, வழிகாட்டுதல் மற்றும் அவர்கள் விரும்பும் தொழில்சார் பாடம் ஆகியவற்றை இலவசமாகப் படிக்க முடியும்.

இதற்கிடையில், உத்தேச கல்வி சீர்திருத்தங்கள் மூலம், குழந்தைகள் அறிவு, அணுகுமுறைகள் மற்றும் திறன்களை பெற்றிருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

Comments are closed.