இலங்கையில் சொந்த மகளை பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்த கேவலமான தாய்..!

295

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இத்தாலிய பிரஜை ஒருவரின் கீழ் சிறுமி ஒருவரை கடத்திச்சென்று பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்ய முயற்சிப்பதாக தாய் அளித்த முறைப்பாட்டின் பேரில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சிறுமி கடத்தப்படவில்லை எனவும் குறித்த சிறுமி கட்டுநாயக்க பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த இந்த தாய் வெளிநாட்டில் பணிபுரிந்து மீண்டும் நாடு திரும்பிய நிலையில் அவர் பல வருட காலமாக படல்கம பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவருடன் பழகி வந்துள்ளதாகவும் பல்வேறு வெளிநாட்டவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த தாய் , சிறுமியை பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் பின்னர் அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பாதுகாவலர்கள் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த சிறுமி காணாமல் போயுள்ளதுடன் இத்தாலி பிரஜை ஒருவரின் கீழ் இந்த சிறுமி கடத்திச்செல்லப்பட்டதாக கூறி இந்த தாய் படல்கம பொலிஸாருக்கு முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் குறித்த சிறுமியை கட்டுநாயக்க பிரதேசத்தில் உள்ள கூலி வீடொன்றில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து இந்த சிறுமி பாதுகாவலரின் கீழ் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.