இலங்கையர்களின் வெளிநாட்டு மோகம்-இதுவரை 467 பேர் பலி-வெளியான அதிர்ச்சி தகவல்..!

வேலைவாய்ப்புக்களுக்காக வெளிநாடுகளுக்கு சென்ற இலங்கையர்களில் 476 பேர் 2023ம் ஆண்டு உயிரிழந்துள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கருத்து
பல்வேறு நாடுகளில் வசித்து வந்த இலங்கையர்கள், பல்வேறு காரணங்களினால் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 366 பேர் இயற்கை காரணங்களினால் உயிரிழந்துள்ளனர்.

36 பேர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதுடன், 34 பேர் வாகன விபத்துக்களினால் உயிரிழந்துள்ளனர். ஏனைய காரணங்களினால் 27 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

10 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்கூறிய விடயங்களால் பாதிப்படுவோர் யார்?
சுற்றுலா விசாவை பயன்படுத்தி வேலைக்காக செல்வது சட்டவிரோதமானது என்றும் சுற்றுலா விசாவை பயன்படுத்தி வேலை தேடி வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அண்மையில் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

தொழிலுக்காக செல்வோர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் தம்மை பதிவு செய்ததன் பின்னர் வெளிநாடுகளுக்கு செல்வது கட்டாயமானதாகும்.

ஓமானில் தொழிலுக்காக சென்று மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்ட ஒருவர் ஏழு இலட்சம் ரூபா செலவில் சுற்றுலா விசாவில் அங்கு சென்றிருந்தமையும் தெரிய வந்துள்ளதாக பணியகம் அண்மையில் அறிவித்திருந்தது.
வேலை தேடி செல்வோரின் விகிதம் அதிகரிப்பு
2023ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் 1 இலட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம், 1 இலட்சத்து 71 ஆயிரத்து 15 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

ஜூலை மாதத்தில் மாத்திரம் 24 ஆயிரத்து 578 பேர் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

அத்துடன், 2022ஆம் ஆண்டில் 3 இலட்சத்து 11 ஆயிரத்து 56 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Comments are closed.