இன்றைய வானிலை.

101

கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார் , வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டில் நிலவுகின்ற வறட்சியான வானிலையில் நாளை முதல் விசேடமாக தென் அரைப்பிராந்தியத்தில் தற்காலிகமாக மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி,மாத்தறை மற்றும் நுவரேலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 35 ‐ 40 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வறட்சியான வானிலை காணப்படும். மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

திருகோணமலை தொடக்கம் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்குஅப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 15 – 25 கிலோமீற்றர் வேகத்தில் வட கிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.