இந்திய தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு!

107

2024 மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் 4 அன்று அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளன. இதன்படி கட்டம் 1: ஏப்ரல் 19 ஆம் திகதியும், கட்டம் 2: ஏப்ரல் 26 ஆம் திகதியும், கட்டம் 3: மே 7 ஆம் திகதியும், கட்டம் 4: மே 13 ஆம் திகதியும், கட்டம் 5: மே 20ஆம் திகதியும், கட்டம் 6: மே 25 ஆம் திகதியும், 2024 கட்டம் 7: ஜூன் 1 ஆம் திகதியும் என்ற அடிப்படையில் தேர்தல் வாக்குப்பதிவுகள் நடத்தப்படவுள்ளன.

தமிழகத்திலும் புதுச்சேரியிலும் கட்டம் ஒன்றின் அடிப்படையில் ஏப்ரல் 19ஆம் திகதி வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளன.தேர்தலை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்யவும், அனைத்து பகுதிகளிலும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் இந்த கட்ட அணுகுமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

47.1 கோடி பெண்கள் மற்றும் எஞ்சிய ஆண்கள் உட்பட 97 கோடி பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதிப்பெற்றுள்ளனர். இந்த தேர்தல் சுழற்சியில் 1.82 கோடி புதிய வாக்காளர்கள் இணைந்துள்ளனர்.

88.4 லட்சம் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க அதிகாரம் பெற்றுள்ளனர், தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் 10 லட்சம் சாவடிகளை அமைத்துள்ளது தேர்தலை சுமுகமாக நடத்த 1.5 கோடி தேர்தல் அலுவலர்கள் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.