அரையிறுதிக்கு தெரிவாகிய முல்லை மாவட்ட உதைபந்தாட்ட அணி..{படங்கள்}

183
COMMANDERS CUP -2024
Friendship challenge Trophy Football Tournament ஆல் நடத்தும் அணிக்கு பதினொரு பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் காலிறுதி போட்டி நேற்றையதினம் (17.02.2024)  யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
முதலாவது காலிறுதிப் போட்டியில் யாழ் லீக் மற்றும் முல்லை லீக் அணிகள் மோதியிருந்தது. இடைவேளையின் பின்னரான ஆட்டம் விறுவிறுப்பை பெற்றிருந்தது. இருப்பினும் ஆட்ட நேர முடிவில் 2-2 என்ற கோல்கணக்கில் சமநிலையில் போட்டி முடிவடைந்தது.
சமனிலை தவிர்ப்பு உதை முடிவில் 4-3 என்ற கோல் கணக்கில் முல்லை லீக் தெரிவு அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
போட்டியில் யாழ் லீக்சார்பில் விக்னேஷ் ,லியோ தலா ஒவ்வொரு கோலினையும். முல்லை லீக் சார்பில் டாயான், ஸரெபெக்சன் தலா ஒவ்வொரு கோலினையும் பெற்று கொடுத்திருந்தனர்.
FB IMG 1708235261191 FB IMG 1708235265184 FB IMG 1708235258605

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.